தலைக் காவிரியில் தீர்த்த உற்சவம் :சிறப்பு பூஜை

தலைக்காவிரி, அக். 17-
ஜீவநதி காவிரியில் இன்று காலை கன்னி ராசியில் காலை 7:05 மணிக்கு தீர்த்தோற்சவா சிறப்பு பூஜைகள் நடத்தினர். நிரம்பி வழியும் காவிரி தெப்பத்தை கண்டு அப்பகுதியினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாலக்கணத்தில் 7:03க்கு காவிரி தாயிக்கு பூமி பூஜை நடத்தினர்.
காவிரி தாயிக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். கோபாலாச்சார்யா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். மகா சங்கல்பா பூஜை, குங்கும அர்ச்சனை பூஜைகள் நடத்தினர்.
ஆண்டுதோறும் நடைபெறுகிற காவிரி தீர்த்தோற்சவாவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம் ‌. ஆனால் இம்முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குறைவானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.