தலைமறைவாக இருந்த சந்தன மர திருடன் கைது

பெங்களூரு, செப்டம்பர் 8- பன்னர்கட்டாவில் சந்தன மரம் திருடன் கும்பல் மீது வன காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் மற்றவர்கள் தப்பி சென்றனர் இந்த வழக்கில் தப்பி சென்ற கும்பலில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்
மாலூர் நெட்டூரஹள்ளியைச் சேர்ந்த கோபால் (48) பிடிபட்ட குற்றவாளி.கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் அருகே இவரை போலீசார் கைது செய்தனர். 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டிலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் பன்னர்கட்டா பகுதியில் தொடர்ந்து திருடி வந்துள்ளார். தனது கூட்டாளியான திம்மராயப்பாவுடன் கல்கெரே பகுதியில் நுழைந்து சந்தன மரங்கள் வெட்டும் பணியின் போது வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி சந்தன திருடர்களை சரணடையுமாறு அறிவுறுத்தினர். குற்றவாளிகள் சரணடையாததால், வனக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.