புதுடெல்லி, செப்.24- உலக அரங்கில் பாரத நாட்டின் தலைமைத்துவம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் சந்திராயன் 3 மற்றும் ஜி 20 மாநாடுகளே இதற்கு சாட்சி என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மன்கி பாத் மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது.
சந்திரயான்-3 வெற்றி ஜி-20 மாநாட்டின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பில் முழு உறுப்பினராக்குவதன் மூலம் இந்தியா தனது தலைமையை நிரூபித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் பல நூறு ஆண்டுகளாக உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகாஷ்வானியின் மன் கி பாத் தொடரின் 105 வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இந்தியாவின் வலிமையையும் தலைமைத்துவத்தையும் முழு உலகிற்கும் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றார்.
ராஜஸ்தானில் சுக்தேவின் குழு சென்னையில் ஆட்டோ டிரைவர் எம்.ராஜேந்திர பிரசாத் போன்ற பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் பாம்புகள் மற்றும் புறாக்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஊக்கமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் பாராட்டினார். இதேபோல்
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டம் ஜன பகிதாரில் சோட் நதியை புதுப்பிக்க 70 கிராமங்கள் ஒன்றிணைந்தன. ஆற்றங்கரையில் 10,000 மூங்கில் மரக்கன்றுகளை மக்கள் நட்டுள்ளனர். இதுபோன்ற முயற்சியை நாடு முழுவதும் மேலும் மேலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘கடமை நேரம் உள்ளது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
கர்நாடகாவின் ஹொய்சாள கோவில்கள் மற்றும் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதன் தொடர்பான கோவில்கள் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது.
வரலாற்று மற்றும் கலாச்சார இடங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக அடையாளம் காண்பது இந்தியாவின் முயற்சியாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்