தலைவர் பதவியிலிருந்து கோடிஹள்ளி சந்திரசேகர் நீக்கம்

சிவமொக்கா: மே . 31 – ஊழல்குறித்த செய்திகள் வெளியானதன் பின்னணியில் மாநில விவசாயிகள் சங்க தலைவர் பதவியிலிருந்து கோடிஹள்ளி சந்திரசேகர் நீக்கப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு ஹெச் ஆர் பசவராஜப்பா நியமிக்கப்பட்டுளார். இங்குள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் பிரமுகர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டை கோடிஹள்ளி சந்த்ரசேகர் மறுக்கவில்லை. அதனால் விசாரணை நடக்கும் வரையில் ராஜனாமா அளிக்குமாறு தெரிவித்துள்ளோம். ஆனால் இந்த நோட்டீஸுக்கு அவர் இன்று வரை பதில் அளிக்கதாதால் அவரை நீக்குகிறோம் என விவசாயிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல விவசாயிகள் கோடிஹள்ளி சந்திரசேகருக்கு எதிராக கோஷங்கள் கிளம்பியுள்ளனர். மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமை சேனை தலைவராக ஹெச் ஆர் பசவராஜப்பா தேர்வாகியுள்ளார்.