தவறான சிகிச்சைக்கு பலி

சென்னை, நவ.- 15
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின்னர் அவர் ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், அந்த மாணவிக்குக் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவ்டிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படந்ததனர். அப்போது அங்கிருந்து வீராங்கனை பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகும் வலி குறையாததால் 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காலை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது.அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் பிரியா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை அறிந்ததும் பெற்றோர்களும், சகோதரர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.
குறிப்பிட்ட ஆபரேசனை செய்ததும் கட்டு போட்டிருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவால் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதனால் கால் அழுகி தொற்று உருவாகி இருக்கிறது. இதுவே பிரியாவின் உயிரை பறித்து இருக்கிறது. மாணவி பிரியாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்த்து கண்கலங்கினார். பின்னர் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார். ஏற்கனவே மாணவி பிரியாவை நேரில் பார்த்து தைரியம் சொல்லி பேட்டரியால் இயங்கும் செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரியாவின் இழப்பு மிகப்பெரிய துயரத்தை தருவதாக அவர் கூறினார்.

2 டாக்டர்கள் சஸ்பெண்ட்

எதிர்கால இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து வீராங்கனையாக வர இருந்த மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்து அவர் பலியாக காரணமான இரண்டு டாக்டர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

பலியான கால்பந்து வீராங்கனை பெரிய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அலட்சியமாக நடந்து கொண்டு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சைக்கு பலியாகி உள்ள சம்பவத் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் அலட்சியம் நீடிக்கிறது திமுக அரசின் அலட்சியம் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்