தவறான விளம்பரம் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட பதாஞ்சலி

டெல்லி, மார்ச் 21:
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தவறான விளம்பரங்களுக்காக உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.தவறான விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் எம்.டி. ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலியின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் மருத்துவ சிகிச்சைகள் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக தங்களுக்கும், நிறுவனத்திற்கும் எதிராக வெளியிடப்பட்ட அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்க தவறியதை தெளிவுபடுத்துவதற்காக ஏப்ரல் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுள்ளது.