தாங்கமுடியாத முதுகுவலியிலும் தேஜஸ்வி யாதவ் பிரசாரம்

புதுடெல்லி மே 10-
தாங்கமுடியாத முதுகுவலியிலும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பேரணியில் பங்கேற்ற ஒரு வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர் அதில் முதுகுவலிக்கு நிவாரணமாக இடுப்பில் கட்டப்பட்டுள்ள பெல்டைக்காட்டியுள்ளார். மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும் வலி நிவாரணியை உட்க்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தேஜஸ்வி மேலும் கூறுகையில், “தாங்கமுடியாத அளவுக்கு முதுகுவலி உள்ளது. அதற்கு இடையிலும் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும் என்ற வேட்கையால் மருந்து, மாத்திரை, வலி நிவாரண ஊசிகளை செலுத்தி கொண்டு வலியை சமாளித்து வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.