தாசனபுரா ஏபிஎம்சி மார்க்கெட் முடங்கியது

நெலமங்களா, டிச.12-
தாசனபுரா ஏ .பி. எம். சி. சந்தையில் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. அங்குள்ள வியாபாரிகள் வியாபாரம் இல்லாததால் பெரிதும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். நெலமங்களா அருகே உள்ளது தாசன புரா ஏ.பி.எம்.சி. மார்க்கெட். இங்கு வாடிக்கையாளர்கள் விவசாயிகள் வருவோர் இல்லாததால், இங்கு வியாபாரிகள், சில மாதங்களாக தங்களது விலை பொருட்களை வியாபாரம் செய்ய முடியாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது இதனால் அவர்களின் வியாபாரம் ஸ்தம்பித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்துக்கு மத்தியில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளில் பல பேர், சில நாட்களுக்கு முன் எஸ்வந்த்பூருக்கு திரும்பி விட்டனர்.இந்த ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டை 400 கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டது . ஆனால் அது தற்போது வீணாகி உள்ளது. பராமரிப்பு இல்லாததால் இரும்பு கதவுகள் துருப்பிடித்து நாசமாகி வருகிறது. காவலாளிகள் இல்லாததால் திருட்டு சம்பவங்களும் கூட இப்பகுதியில் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது 10 வியாபாரிகள் மட்டுமே வெங்காயம், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு, வியாபாரம் செய்து வருகிறார்கள்.அந்த கடைகளுக்கும் வாடகையாளர்கள் வருவதாக தெரியவில்லை. இதனை ஒட்டி, கட்டப்பட்ட பச்சை காய்கறி, பழ மார்க்கெட் மட்டும் சீராக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுகளை நம்பி ஹோட்டல்கள் கடைகள் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் வராததினால் அவைகளையும் மூடிவிட்டனர்.தாசனப்புரா ஏபிஎம்சி மார்க்கெட்டில், மொத்தம் 212 கடைகள் கட்டப்பட்டன. இவைகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதிகள்,கடை முன் அகலமான முற்றம், கேட் ஆகியவைகளையும் ஏற்படுத்தினர். பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, வியாபாரம் செய்ய 158 கடைகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள கடைகளை பருப்பு மற்றும் தானிய வியாபாரம் செய்ய கடைகள் வழங்கப்பட்டன. கடந்த 2017ல் இந்த நான்கு பொருட்களை கையாளும் அனைத்து வியாபாரிகளையும் வளாகத்திற்கு மாற்றுமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனால் எஸ்வந்த்பூரில் கடை இல்லாத வியாபாரிகள் பலர் அதே ஆண்டில் தாசன புராவில் வியாபாரம் செய்ய ஆர்வத்துடன் வந்தார்கள்.
அவர்களும் கோவிட் சமயத்தில் இடம் பெயர்ந்தனர். லாக் டவுன் நீக்கப்பட்டு மீண்டும் எஸ்வந்த்பூர் வந்தவர்கள் தாசன்பூருக்கு செல்ல விருப்பம் இல்லாமல் தயக்கம் காட்டி வருகிறா ர்கள். இதனால் மேலும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.
தும்கூரில் தேசிய நெடுஞ்சாலையில் பிரதி தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனை கடுமையாக உள்ளது. தாசன்பூரில் கடை பெற்ற 150 வியாபாரிகள் யஷ்வந்தபூரில் வாடகைக்கு கடை எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். ஏ.பி.எம்.சி. இயக்குனர்கள், செயலாளர்கள் இதன் பேரில் முறையான நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வில்லை. இதனால் வியாபாரிகள் எங்களை நடுகடலில் விட்டு விட்டு சென்றார்களே என கண்ணீர் வடிக்கிறார்கள்.பண பரிவர்த்தனை இல்லாததால் கடனை நம்பி மக்கள் வாழும் நிலை உள்ளது என்று அவர்கள் அழுகின்றனர்.அதிகாரிகள் வாக்குறுதிகள் நம்பி அங்கே சென்றோம் தினமும் தவிக்கிறோம் என்று பல வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
பழைய கடைகளை மறு ஏலம் விடப்பட்டால் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் கடை பறிக்கப்பட்டு விடும் என்ற நிலையும் உள்ளது.