தாதா பிரசாத் புஜாரி ஹாங்காங்கில் கைது

மும்பை, பிப். 27-
தாதாமும்பையை சேர்ந்த தாதா குமார் பிள்ைள கும்பலை சேர்ந்தவர் பிரசாத் புஜாரி. தாதாவான இவர் மீது மும்பை மற்றும் தானேயில் 20-க்கும் அதிகமான மிரட்டி பணம் பறித்தல் வழக்கு, ஒரு கொலை, 3 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு விக்ரோலி சிவசேனா நிர்வாகி மீது நடந்த துப்பாக்கி சுடு வழக்கில் பிரசாத் புஜாரியின் தாய் இந்திராவை போலீசார் கைது செய்தனர்.அப்போது தான் போலீசாருக்கு பிரசாத் புஜாரி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து மும்பையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்தது தெரியவந்தது.
ஹாங்காங்கில் கைது
போலீசார் பிரசாத் புஜாரியை 2010-ம் ஆண்டு முதல் தேடி வருகின்றனர். இந்தநிலையில் அவர் ஹாங்காங்கில் பிடிப்பட்ட தகவல் சர்வதேச போலீசார் மூலம் மும்பை போலீசாருக்கு தெரியவந்து உள்ளது. பிரசாத் புஜாரி சீன பெண்ணை திருமணம் செய்து சீனாவின் ஷென்சென் நகரில் வசித்து வந்து உள்ளார்.சம்பவத்தன்று அவர் ஹாங்காங்கில் இருந்து ஷென்சென் நகருக்கு விமானத்தில் செல்ல முயன்ற போது, கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.