
சித்ரதுர்கா : அக்டோபர் . 20 – மொபைல் வாங்கித்தருமாறு தாத்தாவை மிரட்ட விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த பேரன் இறந்துள்ள சோக சம்பவம் ஹோலல்கெரே கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்துவந்த யஷ்வந்த் (20) என்பவன் இந்த சம்பவத்தில் இறந்து போன இளைஞன். புதிய மொபைல் போன் வாங்கித்தருமாறு அடம் பிடித்த யஸ்வந்த் தாத்தாவை மிரட்ட வென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அவன் இறந்தே போனான் . இம்மாதம் 8 அன்று ஹிந்து மகாகணபதி விக்ரஹ கரைப்பின்போது யஸ்வந்த் தன்னுடைய போனை தொலைத்துள்ளான். இதனால் தனக்கு புதிய மொபைல் போன் கேட்டு தந்தையிடம் வற்புறுத்தியுள்ளான் . பின்னர் தந்தை தனக்கு உடன்படாததால் தாத்தாவிடம் அடம் பிடித்துள்ளான். தாத்தாவோ தன்னுடைய வெங்காய பயிர் விளைச்சல் வந்த பின்னர் போன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் தனக்கு உடனே போன் வேண்டும் என தாத்தாவை மிரட்ட விஷம் குடித்து தற்கொலை நடனமாட முயற்சித்துள்ளான். ஆனால் யஸ்வந்த் இந்த விஷம் அருந்தியதால் இறந்தே போனான். இவன் விஷம் அருந்திய உடனே இவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யஸ்வந்த் இறந்து போனான். இது குறித்து சித்ரஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. இதே வேளையில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட விவசாயி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன சம்பவம் மைசூர் மாவட்டத்தின் ஹுனஸூர் தாலூகாவின் தட்டெகெரே என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தட்டகெரே கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் (50) என்ற விவசாயியாவார் . இவர் ஆடுகளுக்கு தீவனத்திற்க்காக மரத்தில் இருந்து இலைகளை பறிக்கும்போது இவரை தேனீக்கள் சரமாரியாக கொட்டியுள்ளன . இதனால் பலத்த காயங்களடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லக்ஷ்மன் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து போனார் . இந்த சம்பவம் குறித்து ஹுனஸூர் கிராமாந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.