தாமரை பறிக்க முயன்றதந்தை மகன் மூழ்கி சாவு

பெங்களூர் : ஆகஸ்ட். 24 – வரமஹாலக்ஷ்மி பண்டிகைக்கு விற்பனை செய்ய தாமரை பூக்களை பறிக்க இறங்கிய தந்தை மற்றும் மகன் இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் தொட்டபல்லபுராவின் பூசனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் நடந்துள்ளது. தொட்டபள்ளபயறாவின் ஷாந்திநகரை சேர்ந்த புட்டராஜூ (42) மற்றும் அவருடைய மகன் கேசவா (14 0 ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தவர்கள் ஆவர். வரமஹாலட்சுமி பண்டிகைக்கு விற்பனை செய்ய பூசனஹள்ளி அருகில் உள்ள ஏரிக்கு தாமரை பூக்களை பறிக்க தந்தை மற்றும் மகன் இருவரும் சென்றிருந்தனர். ஏரியின் கரையில் தங்களின் மொபைல் மற்றும் காலணிகளை விட்டு விட்டு ஏரியில் இறங்கிய போது விபத்து நடந்துள்ளது. ஆழம் தெரியாமல் இவர்கள் ஏரியில் இறங்கியதால் சேற்றில் சிக்கிக்கொண்டு இருவரும் இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . மற்றொரு தாமரை வியாபாரி ஏரியில் தந்தை மகன் இருவரும் ஏரியில் மூழ்கி இருப்பது தெரிய வநதுள்ளது. தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு ஊழியர்கள் ஏரியில் தேடி உடல்களை மேலே எடுத்துள்ளனர்.

இறந்த தந்தை மற்றும் மகனின் உடல்களை கண்டு குடும்பத்தார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது . இந்த சம்பவம் குறித்து பெல்வங்களா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.