தாயின் மரணத்தால் மனம் நொந்த மகன் ஏரியில் குதித்து தற்கொலை

பெங்களூர்: செப்டம்பர். 19 –
தாயின் மரணத்தால் மனவியல் ரிதியாக பாதிப்புக்குள்ளான மகன் ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சோக சம்பவம் நெலமங்களாவின் சுதா நகரில் நடந்துள்ளது . பசவேஸ்வரா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணய்யா என்பவர் தற்கொலை செய்து கொண்ட மகனாவார். சுதா நகரில் உள்ள லக்கதாசப்பண ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது இறந்த உடல் கிடைத்துள்ளது. கடந்த 10 அன்று மாமியார் வீட்டுக்கு சென்று 11ந் தேதி திரும்பி வருவதாக வீட்டில் சொல்லி விட்டு ராம்நகர் மாவட்டத்தின் மாகடி தாலூகாவின் கௌடய்யன பால்யாவிற்கு ராமகிருஷ்ணய்யா வந்திருந்தார். ஆனால் திரும்பி வீட்டுக்கு செல்லாத காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் ராமகிருஷ்ணய்யாவை தேட துவங்கினர். இன்று ஏரியில் இவரின் இறந்த உடல் கிடைத்துள்ளது. மது பான கடை ஒன்றில் ராமகிருஷ்ணய்யா வேலை செய்து வந்ததுடன் சமீபத்தில் அவரின் தாயார் இறந்து போயுள்ளார்.
தாயின் மரணத்தால் மனம் நொந்த மகன் ராமகிருஷ்ணய்யா இதற்க்கு முன்னரும் மூன்று முறை வீட்டிலிருந்து காணாமல் போய் பின்னர் திரும்பி வந்துள்ளார். இந்த முறையும் அதே போல் திரும்பி வருவார் என வீட்டில் உள்ளவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர் . ஆனால் ராமகிருஷ்ணய்யா தற்போது ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.