தாயை மகன் கொன்ற சம்பவத்தில் தந்தைக்கும் தொடர்பு அம்பலம்

பெங்களூர் : பிப்ரவரி . 6 – நகரின் கே ஆர் புரத்தில் உள்ள ஜஸ்டின் பீமய்யா லே அவுட்டில் கடந்த பிப்ரவரி 2 அன்று காலை சிற்றுண்டி கொடுக்கதாத காரணத்திற்க்காக திட்டிய சிறுவன் ஒருவன் தன் பெற்ற தாயை கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தந்தையையும் ஈடுபட்டிருப்பது விரல் ரேகை சோதனையில் தெரிய வந்துள்ளது. காலை சிற்றுண்டி கொடுக்கும் விஷயாயமாக தாயிடம் சண்டை போட்ட மகன் தன்னுடைய தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளான். பின்னர் தானாக போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் போலீசார் மேற்கொண்ட விரல் ரேகை சோதனையில் இவனுடைய தந்தையும் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்திய இருப்பு கம்பியில் இரண்டு வித கை ரேகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. .பின்னர் இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் புலனாய்வு துறைக்கு இந்த இரும்பு கம்பியை அனுப்பியபோது அதில் தந்தை மற்றும் மகன் இருவரின் கை ரேகை பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் கொலையுண்ட நேத்ராவின் கணவன் சந்திரப்பா என்பவரை கே ஆர் புறம் போலீசார் தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் தன் மனைவியின் கொலையில் தனக்கு பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். என டி சி பி சிவகுமார் தெரிவித்துளார். கொலையுண்ட நேத்ராவுக்கு கள்ள தொடர்புகள் மற்றும் குடி பழக்கம் இருந்து வந்ததுதுடன் பல சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கு வர மாட்டார். நாங்கள் உணவு இன்றி காலி வயிற்றில் இருந்தோம். இது குறித்து அவளை கேட்கும்போதெல்லாம் ஆபாச வார்தைகாலால் எங்களை திட்டி வைத்தது குறித்து வெறுத்துப்போனோம். இதனால் மகனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய முடிவு செய்தேன் என சந்திரப்பா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சூழ்ச்சி செய்து தந்தை தாயை இரும்பு கம்பியால் தாக்கிய பின்னர் மகனும் தாயை ஓரிரண்டு அடிகள் இரும்பு கம்பியால் அடித்துள்ளான். தாய் இறந்தது குறித்து நிச்ச்யயம் ஆனா பின்னர் தன் தந்தை குறித்து கவலை கொண்ட சிறுவன் தந்தை சிறைக்கு செல்லவேண்டாம் . அதுவே சிறுவர்கள் சிறைக்கு சென்றால் தண்டனைகள் குறைவாக இருக்கும். தவிர சிறையிலேயே கல்வி பயிற்சியும் அளிப்பார்கள். நான் சிறையிலிருந்து வெளியே வருவதற்குள்ளாக நீங்கள் நல்லபடி பணம் சம்பாதித்து வெற்றி பெறுங்கள் என தன்னுடைய தந்தையை மனம் திருத்தி தானே குற்றவாளியாக போலீசில் சரணடைந்துள்ளான். பின்னர் தந்தையை தப்பித்து செல்லுமாறு கூறிவிட்டு மகன் கே ஆர் புரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான். பின்னர் நடத்திய சோதனைகளில் தந்தையின் பங்கும் இந்த கொலையில் இருப்பது தெரியவந்ததாக டி சி பி சிவகுமார் தெரிவித்தார்.