தாய் இரண்டு குழந்தைகள் மர்ம சாவு – கணவன் கொன்றதாக சந்தேகம்

சாமராஜ்நகர் : செப்டம்பர் . 15 – குண்டுலுபேட்டே தாலூகாவின் பொம்மனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய இரண்டு
குழந்தைகளுடன் சந்தேகமான நிலையில் இறந்திருப்பது கொலையா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது . பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் உறங்கிய நிலையில் இறந்துள்ளதுடன் அவளுடைய கணவன் மற்றும் அவன் பெற்றோர் தற்போது காணாமல் போயுள்ளனர் . குண்டலுபேட்டே தாலூகாவின் பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மேகா (24) , மற்றும் அவருடைய குழந்தைகள் பூந்விதா (6) மற்றும் மன்விதா (3) ஆகியோர் இறந்துள்ள குழந்தைகள் . மூன்று பேரையும் கணவனே தூக்கு மாட்டி கொலை செய்துள்ளதாக மேகாவின் பெற்றோர் குற்றங்சாட்டியுள்ளனர் . அபி என்பவர் மேகாவின் கணவன் . மேகா மற்றும் அபிக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றது . கணவன் ஆரம்பத்திலிருந்தே மேகாவை துன்புறுத்தி வந்துள்ளான் நேற்று கலாட்டா நடந்து மூன்று போரையும் தூக்கு மாட்டி கொலை செய்துள்ளான் என மேகாவின் தந்தை மகேஷ் தெரிவித்துள்ளார் .அபி உட்பட அவனுடைய பெற்றோரும் தற்போது தலைமறைவாயுள்ளனர் . சம்பவ இடத்திற்கு தெரணாம்பி போலீசார் வந்து பரிசீலனை நடத்தியுள்ளனர் .