தாய் மகள் தற்கொலை

சிக்கோடி : ஜூன் . 1 – குடும்ப தகராறால் வெறுத்து போன தாய் ஒருவர் தன் எட்டு வயது குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள துயர சம்பவம் ஆதனி தாலூகாவின் பாலகேறி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்துவந்த சவிதா மதகொண்ட பெலகலி (24) மற்றும் அவருடைய மகள் பவித்ரா மதகொண்ட பெலகலி (8) ஆகியோர் இந்த சம்பவத்தில் இறந்தவர்கள். குடும்ப சண்டைகள் காரணமாக இவர்கள் தற்கொலை செய்துகொம்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . இந்த தற்கொலை நடந்தஇடத்திற்கு போலீசார் நேரில் வந்து ஆய்வுகள் செய்திருப்பதுடன் கிணற்றில் இருந்த உடல்களை வெளியே எடுத்து அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.