தாய் மறைவு தாங்க முடியாமல் மகன் தற்கொலை

பெங்களூர், ஜன .13 – .தாய் மறைவை தாங்க முடியாமல் வேதனை பட்டு துடி துடித்து வந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த துயர சம்பவம் கவுரிபிதனூரில் நடந்துள்ளது.
சையத் இர்பான், 25 . இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை மாற்றுத்திறனாளி. தாயார் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். தாயின் மருத்துவச் செலவை பார்த்துக் கொண்டே தனது மூத்த சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் மரணமடைந்தார்.இந்த நிலையில் தாயின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் தினமும் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் ஐ மிஸ் யு அம்மா என்று பதிவிட்டு வந்தார்.இதையடுத்து அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து கவுரிரிபிதனூர் நகர நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.பிரசன்ன குமார் வழக்குப் பதிவு செய்துள்ளார்