தாய் வீட்டிற்கு பணம் கொடுத்த மனைவியை கொன்ற கணவன் கைது

பெங்களூரு, மே 4:
நிலத்தை கையக்கப்படுத்தியதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையில் பெருமளவு தாய்வீட்டிற்கு அனுப்பிய பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரது கணவரை டாபஸ்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.நெலமங்களா தாலுக்கா கோட்டிகெரே கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (36). இவரது கணவர் ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீனிவாஸ் என்பவரின் 1 ஏக்கர் நிலம் தபாஸ் பேட்டை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்டு, ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கியது.
இதில் பெரும்பாலான பணத்தை தனது மனைவி தாய்வீட்டுக்கு அனுப்பியதால் கோபமடைந்த கணவர் ஸ்ரீனிவாஸ், மனைவியுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுள்ளார்.ஸ்ரீனிவாஸ் இரவில் சடலத்தை புதைக்க குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, ​​குழந்தைகள் விசாரித்தபோது, ஜெயலட்சுமி ​​தற்கொலை செய்துகொண்டார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார்.
இருப்பினும், குழந்தைகள் தங்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறியதையடுத்து, குடும்பத்தினர் தபாஸ் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து, வழக்குப் பதிவு செய்து ஸ்ரீனிவாஸைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.