தாய் 2 பிள்ளைகளைக் கொன்ற கள்ளக்காதலன் கைது

ஹாசன் : ஜனவரி. 7 – நகரின் புறப்பகுதியில் உள்ள தாசரகொப்பா என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மரமான முறையில் இறந்திருப்பதாக போலீஸ் சந்தேகித்து இந்த கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாயுள்ள பெண்ணின் கள்ள காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை அவளுடைய கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்கு வந்திருந்த தாயின் கள்ள காதலன் விஜயபுராவை சேர்ந்த நிங்கப்பா காகவாடா கொலை செய்துள்ள நிலையில் அவனை போலீசார் தற்போது கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். இவன் பணத்திற்க்காக தாயிடம் வற்புறுத்திவந்த நிலையில் அவர் இதற்க்கு ஒப்புக்கொள்ளாததால் ஆத்திரமடைந்து ஷிவம்மா மற்றும் அவருடைய குழந்தைகள் பவன் (10) மற்றும் சிஞ்சனா (8) ஆகிய மூன்று பேரையும் கொலை செய்து விட்டு தலைமறைவாயிருந்த நிங்கப்பா காகவாடாவை பென்ஷன் மொஹல்லா போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் தேதி அன்று தாசரகொப்பளின் வீடு ஒன்றில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மர்மமான முறையில் கொலையுண்டிருந்தனர். பேக்கரி வேலைக்காக துமகூருக்கு சென்றிருந்த கணவன் வீட்டுக்கு திரும்பி வந்த போது இந்த கொலைகள் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் இவை கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலைகளின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது. கணவன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்திருந்த மனைவியின் கள்ள காதலனே இந்த கொலை செய்திருப்பது தெரிய வந்து தற்போது அவன் கைதாகியுள்ளான். கொலையுண்ட சிவம்மா மற்றும் கணவன் தீர்த்தபிரசாத் இருவரும் பீஜாப்பூரில் பேக்கரி நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் பிஜாபூராவை சேர்ந்த நிங்கப்பா காகவாடா மற்றும் சிவம்மாவுக்கிடையே கள்ள தொடர்பு உண்டாகியுள்ளது. பின்னர் பிஜாபூராவில் பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சிவம்மாவின் கணவன் துமகூருவில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊரை விட்டு கணவன் தூரம் இருந்ததால் சிவம்மா தன் கள்ள காதலை தொடர்ந்துள்ளார். கார் ஓட்டுநர் என தன கணவனுக்கும் சிவம்மா கள்ள காதலனை அறிமுகப்படுத்தியுள்ளாள். கணவன் துமகூருக்கு வேலைக்கு சென்றிருந்ததால் சிவம்மா புத்தாண்டை கொண்டாட தன் கள்ள காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளாள். அப்போது இவர்கள் இருவருக்குள் பண தகராறு ஏற்பட்டுள்ளது. குற்றவாளி சிவம்மாவிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளான். இதற்ற்கு சிவம்மா ஒப்பாததால் அவளை கழுத்து நெரித்து கொலைசெய்துள்ளான். பின்னர் அவளுடைய இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்து விட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் குழாயை நீக்கி சிவம்மாவின் மொபைல், தாலி மற்றும் தங்க சங்கலியுடன் தப்பியோடியுள்ளான். மறுநாள் கணவன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் கொலையுண்டிருப்பது கண்டு போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர்.