தார்வாட் மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை


தார்வாட், ஏப்.7- கர்நாடக மாநிலத்தில் தொற்று இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில் தார்வாட் மாவட்டத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
குரானா இரண்டாவது அலை உயர்ந்து வருவதால் அதனை தடுக்க கோவி சில்டு மற்றும் கோவா ஆகிய இருவிதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது தார்வாட் மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்தி வருகிறார்கள் இதனால் கோவ் ஆக்சின் மருந்துகள் காலியாகி விட்டன இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அப்பகுதியினர் தகவல் அனுப்பி உள்ளனர்.
தார்வாட் மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 380 கோவிஷீல்ட் ‘ மற்றும்
11, 200 ‘ கோவாக்ஸின் ‘ தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இவை அனைத்தும் தார்வாட் மாவட்ட சுகாதாரத் துறைக்கு சொந்தமான கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இதில் கோவாக்சின் மருந்துகள் காலியாகி விட்டன. கோவிஷீல்டு மருந்துகள் 88 ஆயிரத்து 800 பேர் மட்டுமே மீதம் இருந்தது. அதுவும், கூட நேற்றுமுன்தினம் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இனிமேல் பெல்காம் மண்டல அலுவலகத்தில் இருந்து மருந்துகள் வந்தால் மட்டுமே தடுப்பூசி என்ற நிலை உருவாகி உள்ளது. பற்றாக்குறையை போக்க முறையான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.