தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு
2½ லட்சம் வீடுகள்

மும்பை, இந்த ஆண்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு 2½ லட்சம் வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2½ லட்சம் வீடுகள் மராட்டியத்தில் நிறைவேற்றப்பட உள்ள வீட்டு வசதி திட்டங்கள் தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- எல்லோருக்கும் வீடு பிரதமரின் கனவு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மாநில ஊரகப்பகுதியில் 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 2½ லட்சம் வீடுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1½ லட்சம் வீடுகள் மற்ற பிரிவினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டில் 10 லட்சம் வீடுகள் ரமாய் அவாஸ் யோஜனா திட்டத்தில் 1½ லட்சம் வீடுகள் ரூ.1,800 கோடியில் கட்டப்பட உள்ளது. இதில் 25 ஆயிரம் வீடுகள் மாடங் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சாப்ரி, பிரதி, அதிம் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் 2023-24 ஆண்டில் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.