தாவணகெரேவில் வறட்சி தண்ணீர் தட்டுப்பாடு

பெங்களூர் : மார்ச் .28 – தாவணகெரேவில் கடும் வறட்சி தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூர், மார்ச் 28-
தாவணகெரே மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு ஆதாரமாக உள்ள ஏரிகளில் கூட தண்ணீர் நிரப்பப்பட முடியாத அளவுக்கு வாய்க்காலில் தண்ணீர் வறண்டு விட்டது.
அணையின் நீர் எங்கே போகிறது. அதனை தேடி கொடுக்க வேண்டும் என்று முறையிடும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
கோடையில் மலைப்பகுதி உட்பட பிற மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை குறித்தும் தாவணகேரே மாவட்டத்தில் இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டதே இல்லை.
இங்குள்ள தண்ணீர் தேவையை பத்ரா அணை, துங்கபத்திரா நதி நிறைவேற்றி வந்தது. ஆனால் இப்போது பத்ரா வாய்க்காலில் போதிய தண்ணீர் திறக்கப் பட்டாலும், அது முறை யாக பயன்படுத்தாமல் குடிநீர் தேவைக்காக நிறைவேற்ற ப்படவில்லை.
பத்ரா நீர்த்தேக்கத்தில் 3 ஆயிரத்து 273 கன அடி திறந்து விடப்படுகிறது. தாவணகெரே மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வலது கரை வாய்க்காலில் 2650 கன அடி நீர் வழங்கப்படுகிறது.
இடது கரை வாய்க்காலில் 380 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பல ஆண்டுகளாக திறக்கப்பட்ட தண்ணீரின் கொள்ளளவு விட அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டால், கால்வாய் உடைந்து விடும். தண்ணீர் வீணாகும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.
முறையாக தண்ணீர் தேக்கப்படாததால்
இப்போது விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பலர் பம்ப் செட்டுகள் மூலம் இழுத்துக் கொள்கின்றனர்.
இதனால், நெற்பயிர்கள் பயிரிட முடியாத கஷ்டத்தில் விவசாயிகள் உள்ளனர். குடிநீருக்கும் அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.