திண்டுக்கல் சீனிவாசன்மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஆக. 8- அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.