தினசரி கொரோனா பாதிப்பு 4000 நெருங்கியது

டெல்லி: ஜூன் 4 –
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,962 பேர் பாதித்துள்ளனர்.

  • இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 26 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,677 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,697 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,25,454 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    *இந்தியாவில் 1,93,96,47,071 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,67,037 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.