தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 4,510 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: செப்டம்பர். 21 – இந்தியாவில் 5 நாட்கள் தொடர் சரிவிற்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு 4,043 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 4,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 12 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,640 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 72 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,216 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 1,163 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 19 மரணங்கள் உள்பட மேலும் 33 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,403 ஆக உயர்ந்துள்ளது.