திமுக அரசால் மயான பூமியாக மாறும் தமிழகம்: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: ஆகஸ்ட். 30 – திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது என முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ரவுடிகளை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.
திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை. சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம்.
அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன், பே ட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெ ரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.