திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்

சென்னை: பிப். 17:
தமிழகத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை இதுவரை தொடங்கவில்லை. ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 25-க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய திமுக நினைக்கிறது. ஆனால் விசிக, மதிமுக கட்சிகளும் மநீம கட்சியும் தங்களது சொந்த சின்னங்களில் போட்டியிட விரும்புகின்றன.
இந்த சூழலில் பட்ஜெட் கூட்டம் முடிந்த பின் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார் ஜூன கார்கே வருகையும் உறுதி செய்யப்படவில்லை.எனவே, கட்சிகளுக்கு வசதியான நேரம், தேதியை திமுக தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் கூட்டணி கட்சிகளிடம் திமுக தெரிவித்துள்ள எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம், 19-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை திமுக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.