திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு: மார்ச். 2 -ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இடைத் தேர்தலில் மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 106 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 16 தபால் வாக்குகளை பெற்றுள்ளார்.
தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையிலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
2 சுற்று வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம்!!
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் :12,803
அதிமுக வேட்பாளர் தென்னரசு : 4,324 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா :585
தேமுதிக வேட்பாளர் ஆனந்த் : 17 இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.