திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழு அமைப்பு

சென்னை: ஜன. 19: நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த குழுவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டி.ஆர்.பாலு எம்.பி.யை தான் திமுக தலைமை இது போன்ற நேரங்களில் முன்னிறுத்தும். ஆனால் இந்த முறை டி.ஆர்.பாலுவுக்கு பதில் கனிமொழி முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் திமுக குழுவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதனிடையே இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்: தலைமை: திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)
திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்) திரு.ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்) மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)
மாண்புமிகு டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்) மாண்புமிகு கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்) திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திரு. சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்) திரு. எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்) மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்) மாண்புமிகு மேயர் பிரியா.