திமுக பிரமுகருக்கு பெங்களூரில் கத்திக்குத்து – கவலைக்கிடம்

பெங்களூர் : செப்டம்பர் . 5 – தமிழக தி மு க கட்சியின் மதுரை நகர் தலைவர் மற்றும் ரௌடி பட்டியலில் இருப்பவருமான வி கே குருசாமி என்பவரை காரில் வந்த ஐந்து பேர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தற்போது குருசாமியின் நிலைமை கவலைக்கிடமாயிருப்பதுடன் அவருக்கு நகரின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குள்ளான குருசாமி முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது . பானஸ்வாடி போலீஸ் நிலைய சரகத்தில் கம்மனஹள்ளியில் உள்ள ஸுக் சாகர் ஓட்டலில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டிலிருந்து இவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் ஓட்டலுக்குள் நுழைந்து இவரை வீச்சரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தற்போது குருசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குருசாமி மற்றும் அவரை தாக்கியவர்களுக்கிடையே கடந்த 35 வருடங்களாக பகைமை இருந்துள்ளது . இவர்கள் குருசாமியை கொலை செய்ய பல முறை முயற்சிகள் செய்துள்ள நிலையில் நேற்று இவரை பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்த விவரமான வீடியோ காட்சிகள் ஓட்டலில் இருந்த சி சி டி வி காமிற்காலைல பதிவாகியுள்ள நிலையில் போலீசார் தற்போது அந்த காட்சிகளை ஆய்ந்து வருகின்றனர். குருசாமிக்கு எதிராகவும் பல குற்றபுகார்கள் பதிவாகியுள்ளன. ரௌடி பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் தான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.. இவருக்கு உயிர் மிரட்டல் இருந்ததால் இவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் பகிரங்கமாக திரிய வில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்க வில்லை. இந்த நிலையில் இவருக்கு எதிரான கும்பலை சேர்ந்தவர்களே தற்போது இவரை தாக்கியுள்ள சந்தேகம் எழுந்துள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இவர் மீது பகைமை இருந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். .முருகன் , காளி மற்றும் பாண்டி ஆகியோர் இவருடைய எதிர் கோஷ்டியில் இருந்துள்ளனர் . தற்போது தாக்குதலுக்குள்ளான குருசாமிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2002ல் சென்னு முனிசாமி என்பவரின் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குருசாமி மீது எந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு செய்ய தமிழக போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை போலீசார் நகருக்கு வந்துள்ளனர்.