திரவுபதிக்கு வெற்றி சான்றிதழை வழங்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, ஜூலை 22
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக ஜனாதிபதி வழங்குகிறர். நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி இவரே ஆவார். இதனிடையே, நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பணியாற்றி வரும் நிலையில் அவரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட்டனர். தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்கா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகள் பெற்றார்.