திரிபுராவில் அதிகம்; மகாராஷ்டிராவில் குறைவு

புதுடெல்லி, ஏப். 26- மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள்,
ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 16,65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 7.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 1) அசாம்: 5 மக்களவைத் தொகுதிகள் ( வாக்குப்பதிவு: 9.71%) 2) பிஹார்: 5 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:9.4%) 3) சத்தீஸ்கர்: 3 மக்களவைத் குதிகள்(வாக்குப்பதிவு:15.42%) 4) கர்நாடகா: 14 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு: 9.21%) 5) கேரளா: 20 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.98%) 6) மத்தியப் பிரதேசம்: 6 மக்களவைத் குதிகள்(வாக்குப்பதிவு:13.82%) 7) மகாராஷ்டிரா: 8 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு: 7.45%)
8) மணிப்பூர்: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு: 15.49%)
9) ராஜஸ்தான்: 13 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.77%)
10) திரிபுரா: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு:16.55%)
11) உத்தரப் பிரதேசம்: 8 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.67%)
12) மேற்கு வங்கம்: 3 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:15.68%)
13) ஜம்மு காஷ்மீர்: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு:10.39%).