திருச்சியில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி ஜனவரி 2 -இன்று திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது விமான நிலையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பிஜேபி தொண்டர்கள் உற்சாக வாழ்த்த முழக்கம் எழுப்பி மலர் தூவி வழி நெடக்க வரவேற்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது  வணக்கம், எனது மாணவ குடும்பமே” என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

* இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.

* பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது.

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

* 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை கழகங்களை தொடங்கினர்.

* பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின.

* பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம்

பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.

* கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்.

* மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும்.

 புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்.

* இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உரகுக்கு பறைசாற்றுகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர்தூவி வரவேற்பு நல்கினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிதமர் மோடி அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக பிரதமர் உள்ளே வந்ததும், பதக்கம் பெறும் மாணவர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் பிரதமர், ஆளுநர், முதல்வர் அமர்ந்தனர். குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை நோக்கி “டெல்லிக்கு வர விருப்பமா?” என்று அவர் வினவினார். மாணவர்கள் உற்சாகமான குரலில் ஆமோதித்தனர்.