திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம், நவ. 4-கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் வடமாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.