திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் , மார்ச்.13-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் குவிந்த பக்தர்கள் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வழிபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் பின்னர் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டணம் தரிசனத்தில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வேண்டினர்.