திருடிய மோட்டார் சைக்கிளில் திரிந்தபடி வழிப்பறி 3 பேர் கைது

பெங்களூர்: ஜூலை. 22 – கார பொடி மற்றும் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்துவந்த மூன்று பேரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.
தொட்டேரி கிராமத்தை சேர்ந்த கிரிஷ் (20) , குளுவனஹள்ளியை சேர்ந்த சரத்குமார் (21) மற்றும் சஷாங்க் (18) ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என கிராமந்தர எஸ் பி டாக்டர் வம்ஷிக்ரிஷ்னா தெரிவித்துள்ளார். கைது செய்யப்ட்டவர்களிடமிருந்து கேடிஎம் ட்யூக் மோட்டார் சைக்கிள் , தங்க சங்கலி உட்பட குற்றங்கள் செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். நெலமங்களா தாலூகாவின் மஹிமாபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாத கோயிலுக்கு படம் பிடிக்க வந்த பெங்களூரை சேர்ந்த டேவிட் மற்றும் மணி என்ற இரண்டுபேரை வழிமறித்து அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து கேடிஎம் ட்யூக் மோட்டார் சைக்கில்கள் இரண்டு மொபைல்கள் , 40 ஆயிரம் மதிப்புள்ள காமிரா , ஆகியவற்றை அபகரித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் தாங்கள் திருடிய மோட்டார் சைக்கிளில் துமகூரூ ஹெப்பூரின் நாகவல்லி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர் . கடையில் சிகரெட் , மற்றும் சில தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு கடைகார பெண் மீதி சில்லறையை கொடுக்க முற்பட்டபோது அவருடைய கண்ணில் மிளகாய் பொடியை தூவி இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க சங்கலியை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் சி சி டி வி காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஹென்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.