திருட்டு வழக்கில் தந்தை மகன் கைது

பெங்களூர், ஏப்.16
திருட்டு குற்றச்சாட்டில் தந்தை மகன் இருவரையும் மாத நாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சந்தேகம் நபர்கள்:
மிர்சா சையத் பேக் (23) மற்றும் அவரது தந்தை மிர்சா தாதா நூறுதீன்(52) பல்லாரியில் உள்ள கம்பளி என்ற இடத்தை சேர்ந்தவர்கள்.
பெங்களூர் கடப்பா கெரேயில் முதியோர் இல்லத்தில் பெய்க் துப்புரவு பணியாளராக பணி புரிந்தார். ஏப்ரல் 9ம் தேதி அன்றைய வேலைகளை முடித்துவிட்டு ஒரு சொத்து வாங்குவதற்காக மகன் கொடுத்த பணத்தை விடுதி உரிமையாளர் எண்ணிக் கொண்டிருப்பதை பெய்க் பார்த்தார்.பின்னர் உகாதிக்காக பணசங்கரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். ரொக்க பணத்தை பெறுவதற்கான வாய்ப்பை இழக்க விரும்பாத பெய்க் நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை நகரத்திற்கு வரச் சொன்னார்.
முதியோர் இல்ல உரிமையாளர் வீட்டுக்கு
தேடி சென்றுள்ளனர். பின்னர் தலைமறைவாகி னர்.
வீட்டுக்கு வந்த உரிமையாளர் வீட்டில் இருந்த பணம் நகைகள் திருடு போனதை கவனித்து போலீசில் புகார் செய்தார்.
தந்தை மகன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து
புலனாய்வு செய்தனர். மோப்ப நாய்கள் வரும் என்பதால் அங்கு மிளகாய் பொடி தூவி தப்பித்துள்ளனர்.
இருவரும் பெல்லாரிக்கு தப்பி செல்ல முயன்ற போது, போலீசார்அவர்களை மடக்கி பிடித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 1.25 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.