திருத்தப்பட்ட பாடம் – மாற்றமில்லை

பெங்களூர்: ஜூன் . 7 – திருத்தப்பட்டுள்ள பள்ளிக்கூட பாடங்களை திரும்பப்பெறும் கேள்விக்கே இடமில்லை என உறுதிபட தெரிவித்துள்ள மாநில கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ்,  திருத்தப்பட்ட பாடங்கள் மற்றும் இதற்க்கு முன்னர் நடைமுறையிலிருந்த பாடங்கள் என இரண்டையும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு ஏதாகிலும் குற்றம் குறைகள் இருந்தால் சரிபடுத்திக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். பெங்களூரில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத மற்றும் அவசியமற்ற நிலையில் பள்ளிக்கூட பாடங்கள் விஷயத்தில் பிரச்சனைகளை கிளப்பி அரசியல் செய்து வருகின்றனர். அரசு திருத்தப்பட்ட பாடங்களை திரும்பபெறக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளது. இதற்க்கு முன்னர் சித்தராமையா முதல்வராக இருந்த போது திருத்தப்பட்ட பாடங்கள் மற்றும் இப்போது நாங்கள் திருத்தியுள்ள பாடங்கள் என இரண்டையும் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவோம். அனைத்தையும் பொது மக்களின் முடிவுக்கு விடப்படும். இதற்க்கு முன்னர் சித்தராமையா முதல்வராயிருந்தபோது பர்கூரு ராமச்சந்திரா கமிட்டி எந்த பாடத்தை விட்டு எந்த பாடத்தை சேர்த்தது . இன்றைய கமிட்டி எந்த பாடங்களை சேர்த்துள்ளது போன்ற அனைத்து தகவல்களையும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெப் சைட்டில் வெளியிடப்படும். பொது மக்களே அனைத்தையும் பார்த்து முடிவெடுக்கட்டும் . ஒரு வேளை பொது மக்கள் தற்போதுள்ள திருத்தப்பட்ட பாடங்களில் தவறுகள் உள்ளன , அவற்றை திருத்துங்கள் என்றால் அதை திறந்த மனதுடன் திருத்திக்கொள்ள நாங்கள் தயாராய் இருக்கிறோம். இதற்க்கு முன்னர் சித்தராமையா பர்கூறு ராமச்சந்திரா கமிட்டி வாயிலாக பள்ளி பாடங்களில் என்னவெல்லாம் விஷயங்களை எந்தெந்த காரணங்களுக்காக நிரப்பினர் என அனைத்தும் தெரியும் . ஆனால் அந்த நேரத்தில் எவ்வித கேள்விகளையும் பிரச்சனைகளையும் எவரும் எழுப்பவில்லை. ஆனால் இப்போது அரசியல் காழ்புணர்ச்சியால் பள்ளிக்கூட பாட விஷயத்தை விவகாரமாக்கியுள்ளனர் என தன் அதிருப்தி மற்றும் ஆதங்கத்தை அமைச்சர் நாகேஷ்  வெளிப்படுத்தியுள்ளார்.