திருப்பதின்னாலே லட்டுதான்.. அந்த பிரசாதத்தை யார் தயாரிக்கிறார்கள் தெரியுமா?

திருப்பதி: ஜூன் 8:
திருப்பதிக்கு போனால் திருப்பம், அப்புறம் லட்டு! இந்த லட்டை யார் தயாரிக்கிறார்கள் தெரியுமா? திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டுதான். அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் இருப்போர், திடீரென காலையில் நம் வீடுகளுக்கு வந்து லட்டு பிரசாதத்தையும் கருப்பு நிற கயிறையும் கொடுப்பார்கள். உள்ளே அழைத்ததும் , “திருப்பதிக்கு போய்ட்டு வந்தோம், அதான் பிரசாதம் கொடுக்கலாம்” என வந்தேன் என்பார்கள்.
நாமும் தரிசனம் எப்படியிருந்தது என கேட்போம். இப்படியாக தாங்கள் வாங்கும் லட்டை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்பார்கள். அந்த லட்டை கடந்த காலங்களில் நிறைய அளவில் வாங்கி, அதையே மூன்று வேளையும் உணவாக சாப்பிட்டவர்களும் உண்டு. எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது அந்த லட்டு. திருப்பதி லட்டு எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
பெருமாள் யாரெல்லாம் அவரது பிரசாதத்தை சாப்பிட வேண்டும் என நினைக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர் கூடாது என முடிவு செய்துவிட்டால், தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் லட்டு கிடைக்கவே கிடைக்காது. அது போல் தான் திருப்பதி தரிசனமும்! வெங்கடாஜலபதி விருப்பப்பட்டால்தான் நாம் அவரை தேடி போக முடியும். இல்லாவிட்டால் எத்தனை முறை பிளான் போட்டாலும் அது சொதப்பலில்தான் முடியும். திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அதில் பொங்கல், தயிர்சாதம், புளியஞ்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, முந்திரிப் பருப்பு, எள்ளு சாதம், கேசரி என விதவிதமான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. இத்தனை படைத்தாலும் லட்டை மட்டும் எந்த பிரசாதமும் அடிச்சிக்க முடியாது. வாசனையே தனிதான்.