
திருப்பதி, அக். 28- கே 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்த நிலையில்,
இன்று திருப்பதி கோயிலுக்கு அஜித் குமார் சென்றிருக்கிறார்.. அங்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து, ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.. இந்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நவம்பர் 2ம் வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் AK64 அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது.. ஆனால், அதற்கு முன்பேயே AK65 படத்தின் டைரக்டரை தேர்வு செய்து விட்டதாக மற்றொரு தகவல் பரவி கொண்டிருக்கிறது. எனவே இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் அஜித் நடிக்க போகிறாரா? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
அஜித் குமார் அடுத்த படம் பிரஷாந்த் நீல், விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி போன்ற டைரக்டர்கள் யாராவது ஒருவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவதாக கூறப்பட்ட நிலையில்,
இவர்களில் ஒரு இயக்குனரை அஜித் தேர்வு செய்துவிட்டாராம்… அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், AK65படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது. சினிமா படங்களுக்கு மத்தியிலும், கார் பந்தயத்தை கைவிடாதவர் நடிகர் அஜித் குமார்.. சமீபத்தில்கூட ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்தார்… பிறகு, ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸிலும் கலந்து கொண்டிருந்தார்.















