திருப்பதியில் பக்தர்கள் ஏமாற்றம்

திருப்பதி: டிச. 28: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு விட்டன. மேலும், சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்களும் ஜனவரி 1-ம் தேதி வரைக்கும் வழங்கப்பட்டு விட்டன.
ஆதலால், ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதி வர வேண்டாமென அறிவிக்கப்பட்டது. இதனை அறியாத ஏராளமான பக்தர்கள், தர்ம தரிசனம் செய்யலாம் என்ற எண்ணத்தில் திருப்பதி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.