திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு

திருப்பதி நவ. 25 – இன்று காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.