திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்

திருப்பதி, ஜூலை 17- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.