திருப்பதி டிக்கெட் தேதிஅறிவிப்பு

திருமலை:டிச. 18: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024ம் ஆண்டில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்ச் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமலை, அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்க இன்று 18ம் காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். பின்னர் 20ம் தேதி 12 மணிக்கு பிறகு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுந்செய்தி மூலம் தேவஸ்தானம் அனுப்பும் லின்க்கில் சென்று பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகளுக்கு வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் நடைபெறும் தெப்பல் உற்சவத்திற்கான டிக்கெட் வரும் 21ம் ேததி காலை 10 மணிக்கும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் சேவைக்கு (சேவையில் பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்) வரும் 21ம் தேதி மதியம் 3 மணிக்கு பதிவு செய்யலாம்.