திருப்பதி: தரிசனத்திற்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி, பிப். 9:திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வியாழக்கிழமை 8 மணி நேரம் காத்திருந்தனர்.திருப்பதி திருமலையில் வியாழக்கிழமை காலை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தர்களும் அவர்களின் பெற்றோர்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். வெங்கடேச பெருமாளை புதன்கிழமை முழுவதும் 65,683 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 21,177 பேர் தங்களது முடி காணிக்கையை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.59 கோடி வசூலானதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.