திருப்பதி நடைபாதையில்மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது

திருப்பதி செப். 7- திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இந்த கூண்டுகளில் நான்கு சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் பராமரித்து வரப்படுகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது. இந்த சிறுத்தையுடன் மொத்தம் ஐந்து சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் நடைபாதை பகுதியில் நடமாடிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.