
புதுடெல்லி, பிப்ரவரி. 21 – அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் ஏ.ஐ.-102 ரக விமானம் ஒன்று புதுடெல்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நார்வே நாட்டின் வான்பரப்பில் வந்தபோது, திடீரென இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் போயிங் 777-337 ரக விமானம் என கூறப்படுகிறது. விமானத்தில் 350 பயணிகள் வரை இருந்து உள்ளனர். அதில் பயணித்த ஒருவருக்கு திடீரென அவரச மருத்துவ உதவி தேவைப்பட்டு உள்ளது. இதனால், விமானிகள் லண்டனுக்கு செல்ல வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. எனினும், அவசர மருத்துவ சிகிச்சை யாருக்கு தேவைப்பட்டது, அதன் தொடர்ச்சியாக திடீரென விமானம் வேறு திசைக்கு ஏன்? திருப்பி விடப்பட்டது என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.