திருமணத்திற்கு காதலன் மறுப்பு இளம் பெண் தற்கொலை

ஹாசன், மார்ச் 16: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் சாந்திகிராமில் நடந்துள்ளது.
சென்னராயப்பட்டணா தாலுகா அக்கனஹள்ளிகுடு கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதா (19) தற்கொலை செய்து கொண்டார். ஹாசனில் உள்ள கோகுல்தாஸ் கார்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அம்ரிதா ஹிரிசாவே ஹோபாலி மசகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்ரிதாவின் பெற்றோருக்கு தெரியவர, மார்ச் 11 ஆம் தேதி திலீப்பை அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளனர். ஆனால் திலீப் அம்ரிதாவை சந்தித்து, வெவ்வேறு ஜாதி என்பதால், திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.
மாலையில், அம்ரிதா வீட்டிற்கு வராததால், அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியாமல், கவலையடைந்த குடும்பத்தினர் நுகேஹள்ளி காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று நேற்று சாந்திகிராமம் ஏரியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அம்ரிதா தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து சாந்திகிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.