திருமணத்திற்கு சென்று திரும்பிய3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

ககாரியா (பிஹார் ) மார்ச். 18 – திருமண ஊர்வலத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த கார் எதிரில் வந்த ட்ரேக்டர் மீது மோதிய கொடூர சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரின் பிரசுராஹா போலீஸ் சரகத்தில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. இவர்கள் ஏழு பெரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். துட்டி மோஹனபுரத்திலிருந்து மாதய்யா பித்தலா என்ற கிராமத்திற்கு கார் திரும்பிகொண்டிருந்தது. தேசிய நெடுஞசாலை 31ல் வித்யா ரத்தன் பெட்ரோல் பம்ப் அருகில் ட்ரெக்டர் மீது வேகமாக மோதிய கார் சாலையில் உருண்டுள்ளது. விபத்து குறித்து அறிந்து விரைந்து வசந் போலீசார் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப்பிவைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்து பாதிக்கப்பட்டது மணநாள் காண சென்றவர்கள் பிணமான சம்பவம் அவர்கள் குடும்பம் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்