திருமணம் செய்ய காதலி மறுப்பு காதலன் தற்கொலை

சிக்கமகளூரு, மே.30- திருமணம் செய்துகொள்ள காதலி மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிக்மகளூர்
நரசிம்மராஜபூர் தாலுகா முத்தினகோப்பை அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்த சேத்தன் (31) தற்கொலை செய்து கொண்டவர் ஆவார். சேத்தன் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். மேலும் இவரிடமிருந்து 4 லட்சம் ரூபாய் வரை அந்த பெண் பெற்றுக்கொண்டதாக காதலன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
என் மரணத்திற்கு நீதி கிடைக்க, அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
நரசிம்மராஜபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.