திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டிற்கு தீ வைப்பு

பெங்களூர், மே 3- தன்னை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக திருமணமான பெண் ஒருவரின் வீட்டிற்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த எலெக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் வேறு உபகரணங்கள் கருகிப்போன குற்றத்திற்காக அர்பாஜ் (24) என்பவனை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். காடுகொண்டனஹள்ளியில் வசித்து வந்த அர்பாஸ் கடந்த ஏப்ரல் 11 அன்று இந்த குற்றத்தை நடத்திவிட்டு தலைமறைவாயிருந்தான். பெண் கொடுத்த புகாரை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில் குற்றவாளி அர்பாஸ் புகார்தார பெண்ணின் உறவினன். இந்த பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. ஆனாலும் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குற்றவாளி வற்புறுத்திவந்துள்ளான். இதற்க்கு ஒப்புக்கொள்ளாத பெண் இது குறித்து தன் கணவனுக்கு தெரிவித்துள்ளாள் . பின்னர் பெரியவர்களின் முன்னிலையில் குற்றவாளிக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஏற்கெனவே திருமணமான பெண்ணின் விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் காதல் மோகம் யாரை விட்டது . இவன் திருமணமான பெண்ணை மறுபடியும் தொடர்ந்து சென்று வற்புறுத்தியுள்ளான் . தன்னை தீர்மானம் செய்து கொள்ளும்படி பெண்ணிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளான். இந்த நிலையில் இந்த வழக்கின் புகார்தார் பெண் மற்றும் அவளுடைய குடும்பத்தார் ஏப்ரல் 10 அன்று இரவு உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இருக்கவில்லை. இந்த வேளையில் ஏப்ரல் 11 அதிகாலை இவர்களின் வீட்டுக்கு வந்த குற்றவாளி வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளான். வீடு தி பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தார் புகார்தார பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பெண் வீட்டுக்கு வருவதற்குள்ளாக வீட்டில் இருந்dha அனைத்து பொருள்களும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன .
இப்போது பெண் கொடுத்துள்ள பேரில் குற்றவாளி அர்பாஜை போலீசார் தேடி வருகின்றனர்.